காய்கறி லாரி கவிழ்ந்து விபத்து – 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை அதிகாலை காய்கறி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கர்நாடக , ஹாவேரி மாவட்டம் சவனூரில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் காய்கறிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு விற்பனை செய்வதற்காக உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கும்தா சந்தை நோக்கி புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

எல்லப்பூர் நெடுஞ்சாலையில் குலாப்புரா கிராமத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்புறம் வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக காய்கறி லாரியை இடதுபுறமாக ஓட்டுநர் செலுத்தியுள்ளார்.

இதில், நிலைதடுமாறிய லாரி சாலையோரம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், 15 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினருடன் இணைந்து மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.