ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றம் – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் புதிய ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மாதிரி படத்தை தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளில் ஒருசில புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளின் மாதிரி படம், தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள் தொகுப்பு எண் வட்டங்களை கருப்பு நிற பால்பாயின்ட் பேனாவால் நிரப்புவது தொடர்பாகவும், கண்காணிப்பாளர் கையொப்பம் பகுதி மாற்றம் தொடர்பாகவும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் புதிய ஓஎம்ஆர் விடைத்தாள் மாதிரியை இணையதளத்தில் பார்த்து அறிந்து, தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.