குமரி பூம்புகார் துறைமுகத்திலிருந்து கேரளாவைச் சேர்ந்த ரதீஷ் குமார் என்பவர் தன்னுடைய கைகளையும் கால்களையும் கயிறுகளால்கட்டி கடலில் குதித்து நீந்தி சென்று விவேகானந்தர் நினைவிடத்தில் வீரவணக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

சுவாமி விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த நீச்சல் வீரரான ரதீஷ்குமார் (33) கன்னியாகுமரி கடலில் சாகசம் செய்ய முடிவு செய்தார். இதன்படி கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறையில் இருந்து  விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை 800 மீட்டர் தூரத்துக்கு கடலில் கை, கால்களை கட்டி நீந்திச் சென்று சாகசம் படைத்தார். இதனை அய்யப்பா சேவா சமாஜம் மாவட்டத் தலைவர் குமாரசாமி, அமைப்பாளர் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சுவாமி விவேகானந்தரின் 157 ஆவது பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது 12 :01: 2020 ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு கன்னியாகுமரி பூம்புகார் துறைமுகத்திலிருந்து கேரளாவைச் சேர்ந்த ரதீஷ் குமார் என்பவர் தன்னுடைய கைகளையும் கால்களையும் கயிறுகளால்கட்டி கடலில் குதித்து நீந்தி சென்று விவேகானந்தர் உடைய நினைவிடத்தில் சென்று வீரவணக்கம் செலுத்தினார்.

பூம்புகார் படகுத்துறையில் இருந்து தனியார் வள்ளத்தில் கடலுக்குள் சென்ற ரதீஷ்குமார் கை, கால்களை கட்டிக்கொண்டு குதித்து நீந்தினார். 800 மீட்டர் தூரமுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுமார் அரைமணி நேரத்தில் கடந்தார். நீந்தும் போது அவரது பாதுகாப்புக்காக கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் நவீன், உதவி ஆய்வாளர்கள் சுடலைமணி, நாகராஜன் மற்றும் போலீஸார் ஏக்நாத் படகில் சென்றனர். விவேகானந்தர் பாறையில் நீச்சல்வீரர் ரதீஷ்குமாரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் பி.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.