ஜேஎன்யு பல்கலைக்கழகத்தை 2 ஆண்டுகளுக்கு மூட வேண்டும் : சுப்பிரமணிய சுவாமி

Scroll Down To Discover
Spread the love

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் உள்ள சிந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

அப்போது பேசிய அவர்;- நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இது தொடருமேயானால் வங்கிகளும், பிற நிதி நிறுவனங்களும் மூடப்பட வேண்டியதாகிவிடும். இதனால், பேரிழப்பு ஏற்படும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு முதலில் வருமான வரியை முற்றிலும் நீக்க வேண்டும். ‘வரி பயங்கரவாதம்’ நாட்டிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். 6 வழி மற்றும் 8 வழிச் சாலைகளை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி பேசினாா்.

https://youtu.be/UuYj3GrTu6E

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடா்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ‘ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் வளாகத்திலும் போலீஸாா் இருக்க வேண்டும். அமெரிக்காவில் மாணவா்கள் பாதுகாப்பு கருதி போலீஸாா் நிறுத்தப்பட்டிருப்பாா்கள். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேன்யு) போன்ற பல்கலைக்கழகங்களில் போலீஸாா் மட்டுமல்லாமல், மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களையும் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். ஜேஎன்யு இரண்டு ஆண்டுகளுக்கு மூடப்பட வேண்டும். அந்தப் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவா்களை தில்லி பல்கலைக்கழகம் உள்பட நாட்டின் பிற பல்கலைக்கழகங்களுக்கு மாற்ற வேண்டும்’ என்றாா்.