ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை – இன்று முதல் அமல்..!

Scroll Down To Discover
Spread the love

ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யலாம். புதிய நடைமுறை இன்று (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

நீண்ட துார பயணம் மேற்கொள்ளும், பயணியரின் முதல் சாய்சாக இருப்பது ரயில் தான். முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்யும் பயணியருக்காக, தனி இருக்கை ஒதுக்கிக் கொடுக்கப்படும். படுக்கைகளில் அமர்ந்தும், துாங்கிக் கொண்டும் நிம்மதியாக செல்லலாம்.

பஸ்சில் படுக்கை வசதி கொண்ட சீட் இருந்தாலும், பள்ளங்களில் ஏறி, இறங்கும்போது இடைஞ்சல்களாக இருக்கும். இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்வோருக்கு தூக்கத்தை பாதிக்கும். ஆனால் ரயிலில் அப்படி இல்லை. எந்தவித தொந்தரவும் இல்லாமல் பயணம் செய்யலாம். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், டிக்கெட் கிடைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.

120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வதற்கு முன்பே திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த முன்பதிவு நல்வாய்ப்பாக உள்ளது.

ஆனாலும் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர், கடைசி நேரத்தில் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்வதும் வழக்கமாக நடக்கிறது. இதனால் மற்றவர்களாலும் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், ரயில்களின் முன்பதிவு வசதியை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக ரயில்வே துறை குறைத்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறைகள் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!