கள்ளியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டு கொலை..!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி – களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) சுட்டுக் கொல்லப்பட்டார். கன்னியாகுமரியில் கேரளா எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இரவுப் பணியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் இருந்துள்ளார். இந்த வழியாக அரசி கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதால் போலீசார் எப்போதும் தீவர கண்காணிப்பில் ஈடுப்படுவர்கள்.

இந்நிலையில்  சோதனைச்சாவடியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., வில்சனை, மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.