மழைநீர் வடிகால் பணிகளில் ஊழல் … அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு – சிக்கிய மாநகராட்சி அதிகாரிகள் – லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 நவ.1, 7, டிச. 1 மற்றும் 2019 ஜன. 3, செப். 26, 2020 பிப். 14 ஆகியதேதிகளில் புகார் அளித்திருந்தார். அதில், 2018-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.290 கோடி மற்றும் சேதமடைந்த சாலைகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.246.39 கோடிக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் பலர் மீது புகார் தெரிவித்திருந்தார்.

சிக்கிய மாநகராட்சி அதிகாரிகள்..!

இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து எஸ்.பி வேலுமணி,

மாநகராட்சி செயல் பொறியாளர் ஏ.எஸ்.முருகன்,

ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியாளர் கே.சின்னசாமி,

செயற்பொறியாளர்கள் பி.ஆர்.சரவண மூர்த்தி, வி.பெரியசாமி, வி.சின்னதுரை, ஏ.நாச்சன்,

மண்டல அதிகாரி டி.சுகுமார்,

கண்காணிப்பு பொறியாளர் கே.விஜயகுமார்,

தலைமை பொறியாளர் எல்.நந்தகுமார்,

ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எம்.புகழேந்தி

ஆகிய 10 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

முதல் தகவல் அறிக்கையில், ‘மணலுக்கு பதில் எம்.சாண்டைபயன்படுத்தி மழைநீர் வடிகால்வாய் அமைத்துவிட்டு மணலுக்கான தொகையை குறிப்பிட்டது. ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுக்கு சந்தைவிலையைவிட அதிக தொகையைகுறிப்பிட்டது உட்பட பல்வேறு வழிகளில் அரசுக்கு ரூ.26.62 கோடிஅளவுக்கு இழப்பை ஏற்படுத்திஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.