திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு..!

Scroll Down To Discover
Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சண இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம்,ரூ.300 கட்டண தரிசனம் மற்றும் பல்வேறு சேவைகள் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதில் இலவச தரிசனத்தை தவிர மற்ற தரிசன சேவைகளுக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதேபோல் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு ஆன்லைனில் இலவசமாக டிக்கெட் வெளியிடப்படுகிறது.

அதன்படி நாளை(சனிக்கிழமை) 250 பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இதற்கான இலவச டிக்கெட்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட சில நிமிடங்களில் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது.