சந்திரயான் 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருது – மத்திய அரசு அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை கடந்தாண்டு வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது இஸ்ரோ.இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இந்த தினத்தை மத்திய அரசு தேசிய விண்வெளி தினமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 23ம் தேதி இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாட இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக்குழுவை பாராட்டும் விதமாக இத்திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.அதன்படி, இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.