நவம்பர் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயில் – ஐசிஎப் ரயில்வே நிர்வாகம் தகவல்..!

Scroll Down To Discover
Spread the love

‘வந்தே பாரத்’ ரயில்களில் படுக்கை வசதி கிடையாது. இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்க முடியும். இந்நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை நவம்பர் மாதம் முதல் அறிமுகம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.

வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019 ஆம் ஆண்டு புதுடில்லி – வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை – மைசூர், சென்னை – கோவை என 20ற்கும் மேற்பட்ட வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகத்தில் செயல் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான சுழலும் இருக்கைகள், ஏசி, விசாலமான ஜன்னல்கள் என சொகுசாக பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி கிடையாது. இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்க இயலும்.

இந்த சூழலில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக ஐசிஎப் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அசௌகரியங்களை டாக் பேக் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்கும் வசதி, ஸ்விட்ச் மூலம் இயங்கக்கூடிய கதவுகள், கவாச் எனப்படும் தானியங்கி பிரேக் , சிசிடிவி கேமரா வசதியுடன் இனி படுக்கை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.