கன்னியாகுமரி மக்களுக்கு அடித்த ஜாக்பாட் – எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. இதுதவிர தேவைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன.

அவ்வகையில், மேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கூடுதல் பெட்டி இணைப்பு குறித்த அறிவிப்பை தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

1. ரயில் எண். 16525/16526 கே.எஸ்.ஆர். பெங்களூரு – கன்னியாகுமரி – கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஏசி மூன்றடுக்கு எகனாமி கிளாஸ் பெட்டி (AC Three Economy Coach) ஒன்று இணைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

2. ரயில் எண். 12633/12634 கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஏசி மூன்றடுக்கு எகனாமி கிளாஸ் பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.

3. ரயில் எண். 16585/16586 எஸ்.எம்.வி.டி. பெங்களூரு – முர்தேஸ்வர் – எஸ்.எம்.வி.டி. பெங்களூரு (வழி: மங்களூர் ஜங்சன் மற்றும் மங்களூரு சென்ட்ரல்) எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஏசி இரண்டடுக்கு பெட்டி ஒன்றும், இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் (SL) இரண்டும் இணைக்கப்படும்.

4. ரயில் எண். 16511/16512 கே.எஸ்.ஆர். பெங்களூரு – கண்ணூர் – கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டி மற்றும் ஒரு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டி இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.

5. ரயில் எண். 22677/22678 யஸ்வந்த்பூர் – கொச்சுவேலி – யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.

இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பை பயணிகள் கவனத்தில் கொண்டு தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.