கேன்ஸ் திரைப்பட விழா…. வரலாறு படைத்த இந்தியா- சிறந்த நடிகைக்கான விருது வென்றார் அனசுயா சென்குப்தா!

Scroll Down To Discover
Spread the love

கேன்ஸ் திரைப்பட விழாவின் 77ஆவது நிகழ்ச்சியில் ஓர் இந்திய நடிகை கேன்ஸ் 2024இல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா, ’தி ஷேம்லெஸ்’ படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான ’அன் செர்ட்டன் ரெகார்ட்’ பரிசை வென்றுள்ளார். ’தி ஷேம்லெஸ்’ படத்தினை பல்கேரிய திரைப்படத் தயாரிப்பாளர் கான்ஸ்டான்டின் போஜனோவ் எழுதி, இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம், ஒரு போலிஸ் அதிகாரியைக் கொன்று தில்லியின் பாலியல்தொழில் விடுதியில் இருந்து தப்பித்து, வடஇந்திய பாலியல் தொழிலாளர்களின் சமூகத்தில் வாழும் ரேணுகா, அங்கு 17 வயது தேவிகாவுடன் காதலைத் தொடங்குகிறார். அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிராக, அவர்கள் சுதந்திரத்திற்கான பாதையை நோக்கி முயற்சிக்கிறார்கள் என்பதனையே கருவாகக் கொண்டிருக்கும்.

அனசுயா, தனது வெற்றியின் மூலம், இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார். அனசுயா அளித்த பேட்டியில், ”எங்கள் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, நான் பரவசத்துடன் நாற்காலியில் இருந்து குதித்தேன்!”அனசுயாவைத் தவிர, ’சன்ஃப்ளவர்ஸ் வேர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ’ முதலிடத்தையும் மற்றும் ’பன்னீஹுட்’ மூன்றாவது இடத்தையும் பிடித்தன