கேதார்நாத் கோயில் நடை திறப்பு – : அடுத்த 6 மாதங்கள் பக்தர்கள் தரிசிக்கலாம்..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத்,  பத்ரிநாத்,  கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களும் சார்தாம் என்று அழைக்கப்படுகிறது.  இமயமலையில் அமைந்துள்ள இந்த கோயில்கள் ஆண்டுதோறும் பக்தர்களின் தரிசனத்துக்கான 6 மாதங்கள் திறக்கப்படுவது வழக்கம்.  பின்னர் குளிர்காலம் தொடங்கும்போது கோயில்களின் நடை மூடப்படும்.

அந்த வகையில் இன்று காலை 5 மணிக்கு கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அவரது மனைவி கீதா தாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கேதார்நாத் கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  கோயிலின் நடையை திறக்கும் போது “ஹர ஹர மகாதேவ்” என்ற பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர்.  மீதமுள்ள பத்ரிநாத் கோயில் மே 12 அன்று பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது.கடந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.