நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிடுகிறார்கள் – பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

நான், அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா போன்ற தலைவர்களின் மேற்கோள்களை சித்தரித்து சமூக முரண்பாடுகளை உருவாக்க எதிரிகள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடைய குரலை வைத்து போலி வீடியோக்கள் உருவாக்குகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று வடக்கு மகாராஷ்டிரா மாவட்டமான சத்தாராவில் உள்ள கராத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- நான், அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா போன்ற தலைவர்களின் மேற்கோள்களை சித்தரித்து சமூக முரண்பாடுகளை உருவாக்க எதிரிகள் AI-ஐப் பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடைய குரலை வைத்து போலி வீடியோக்கள் உருவாக்குகின்றனர். இது அபாயத்தை ஏற்படுத்தும். போலி வீடியோவை பார்த்தீர்கள் என்றால், காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.

அடுத்த ஒரு மாதங்களில் மிகப்பெரிய சம்பவத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். நான் இந்த குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக முன்வைக்கிறேன். சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் வகையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்த விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.இதுபோன்ற போலி வீடியோக்களில் இருந்து சமூகத்தை காப்பாற்றுவது நமது பொறுப்பு.

இதுபோன்ற போலி வீடியோக்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.