குருத்வாரா மீது கற்களை வீசித் தாக்குதல் : பாக்கிஸ்தானின் அட்டுழியம் ; சீக்கிய இளைஞர் கொலை ; இந்தியா கடும் கண்டனம்.!

Scroll Down To Discover
Spread the love

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.இதற்கிடையே, நேற்று அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. சீக்கிய தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/AdityaRajKaul/status/1213744873133625344?s=20

இந்நிலையில் பாகிஸ்தானின் பெஷாவார் பகுதியில் சீக்கிய இளைஞர் ரவீந்திர சிங் ஷாப்பிங் செய்ய சென்றிருந்தார். இவர் சகோதரர் பத்திரிகையாளர் ஹர்மீத் சிங்.மலேசியாவில் வசித்து வரும் ரவீந்திர சிங், தனது திருமணத்திற்காக பாகிஸ்தான் திரும்பியிருந்தார். ஷாப்பிங் சென்ற இடத்தில், இஸ்லாமிய கும்பலைச் சேர்ந்தவர்கள், ரவீந்திர சிங் மீது கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரவீந்திர சிங் பரிதாபமாக உயிரிழந்தார். குருநானக்கின் பிறப்பிடமான நங்கனா சாஹிப்பில் அமைந்துள்ள சீக்கிய குருத்வாரா மீது, கடந்த வெள்ளிக்கிழமை, சில கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலின் பின்னணியில் ரவீந்தர் சிங் கொலையும் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பாகிஸ்தானில் சிறுபான்மையினரான சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தும் இழிவான காழ்ப்புணர்ச்சியை நிறுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தை செய்தவர்கள் மீது உடனே கைது நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஒரு உதாரணமாக இருக்கும் வகையில் வழி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கேட்டுள்ளது.