போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!

Scroll Down To Discover
Spread the love

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சந்திப்பின் போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என்றும் சமீபத்தில் பறிமுதலான போதைப்பொருள்களின் விவரங்கள் குறித்த பட்டியலையும் கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.