உலகின் மிக நீளமான இரட்டை வழி சுரங்கப்பாதை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!

Scroll Down To Discover
Spread the love

அருணாச்சல பிரதேசத்தில் சனிக்கிழமை ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, உலகின் மிக நீளமான இரட்டை வழி சுரங்கப்பாதையான ‘சேலா சுரங்கப்பாதையை’ திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முடிவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில், இன்று அருணாசல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி சென்றார்.

உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ. 825 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, சீனாவுடனான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே உள்ள தேஜ்பூரை தவாங் பகுதியுடன் இணைக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சேலா சுரங்கப்பாதை திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை சுரங்கப்பாதை 13,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையாகும். பலிபாரா-சரிதுவார்-தவாங் சாலையில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், அனைத்து வானிலையிலும் போக்குவரத்து இணைப்பை வழங்கும்.