கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மாற்று எரிசக்தி தேவை- இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்..!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற அறிவியல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி: – “புதிய புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சியானது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து தொடர்புடையதாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நவீன கண்டுபிடிப்புகள், அவற்றுக்கான சொத்துசார் உரிமை, வளத்திற்கான உற்பத்தி ஆகியவற்றை இந்தியாவின் இளைய விஞ்ஞானிகளிடம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். மத்திய அரசின் முக்கியத் திட்டங்களான தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் போன்றவை, உலக அளவில் பாராட்டப்படுவதற்கு, அவற்றில் புகுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும் முக்கிய காரணம் என்றார் மோடி.

Advertising

இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கும், கிராமப்புற பொருளாதாரம், சிறு குறு நடுத்தர தொழில் வளத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக மோடி குறிப்பிட்டார். எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து மாற்று எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கான தேவையை மோடி வலியுறுத்தினார். இதற்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆராயுமாறு விஞ்ஞானிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான குறியீட்டில் இந்தியா 52 -வது இடம் முன்னேறியிருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பயிர்க்கழிவுகள் எரிப்பு உள்பட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் நிபுணர்கள் தீர்வு காண வேண்டும்” என்றார். அரசுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையேயான பாலமாக அறிவியல் தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என்றார் அவர்.