பெண்களின் சபரிமலை – ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழா 25-ந்தேதி நடக்கிறது..!

Scroll Down To Discover
Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பெண் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.ஒரே இடத்தில் அதிக பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்திய வகையில் இந்த பொங்காலை திருவிழா 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.  மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும்.

இந்த வருட பொங்கல் திருவிழா இன்றைய தினம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியுள்ளது அன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.இரவு 7.30 மணிக்கு குத்தியோட்ட சிறுவர்களுக்கு சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் 26ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.