மீண்டும் மாநிலங்களவை எம்பியாகிறார் எல்.முருகன்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி மத்திய மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவர் ஏற்கெனவே மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணைஅமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.பாராளுமன்ற மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும். அவ்வாறு நிறைவடையும் உறுப்பினர்களின் பதவிகளுக்கு அவ்வப்போது மத்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது.

அதன்படி இந்த ஆண்டு 68 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. மத்திய மந்திரி எல்.முருகனின் பதவிக்காலமும் இந்த ஆண்டு முடிவடைகிறது.

இதையடுத்து புதிய மேல்சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் வருகிற 27-ந்தேதி நடத்துகிறது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணிக்கையும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தலில் மத்தியபிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடுபவர்களின் பெயர் பட்டியலை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சராக எல்.முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சராகப் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார்.