சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டி – 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு..!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை, சிராவயல் பகுதியில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண வலயபட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் (13 வயது) என்ற சிறுவன் வந்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மஞ்சுவிரட்டு போட்டியை காண வந்த 13 வயது சிறுவன் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் உயிரிழந்த நிலையில், அடையாளம் தெரியாத மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 75 பேர் காயமடைந்துள்ளனர்.