இந்து தெய்வங்களை இழிவு படுத்தும் திமுக கூட்டணி கட்சியினர் ஒட்டு கேட்டு வராதீர்கள்: பழனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏணைய மாவட்டங்களுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 2, 31,890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18,570 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதில், 76.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பழனி நகர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், இந்து மதத்தை அவமதிக்கும் திமுக, கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்டு வரவேண்டாம் என்றும், இந்து மதத்தையும், இந்துக்களையும் அவமதிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளில் இந்து அமைப்பினர் சார்பில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.