மழை நீர் வடிகால் பணிகள் – வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சி திட்டம்!

Scroll Down To Discover
Spread the love

கடந்த டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள், தெருக்களில் தேங்கிய வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது.

மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது, எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றது, பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும், வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.