600 ஏக்கர் கோவில் நிலத்தை பட்டா போட வழக்கு: அரசானை விதித்த தடையை நீக்கவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வருவாய் துறை கோரிக்கை…!

Scroll Down To Discover
Spread the love

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது . மேலும், கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையாக வழங்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டது இருந்து கடந்த நவம்பர் மாதம் உயர்நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது:- தமிழகத்தில் உள்ள 4 லட்சத்து 78 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்களில் 600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பட்டா வழங்கப்பட இருப்பதாக வருவாய்துறை சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. கோயில் வருமானத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றும், கோயில் பூஜைகளுக்கு பாதிப்பு வராது என்றும் தமிழக வருவாய்துறை உறுதியளித்துள்ளது. மேலும் பட்டா வழங்கும் அரசாணைக்கு விதித்த தடையை நீக்கவேண்டும் என வருவாய்த் துறை கோரிக்கை விடுத்துள்ளது.