தெலங்கானா முதலமைச்சராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி – பிரதமர் மோடி வாழ்த்து..!

Scroll Down To Discover
Spread the love

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தெலுங்கானாவின் புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ரேவந்த் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன்.