சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாள்… ரூ. 5 கட்டணத்தில் பயணிக்கலாம் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு நாளை ரூ. 5 கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, மெட்ரோ ரயில்வே நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சிறப்புக் கட்டண சலுகையை மெட்ரோ நிா்வாகம் வழங்கியுள்ளது.

அதன்படி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிச.3-ம் தேதி க்யூஆர் குறியீடு மூலம் ரூ.5 செலுத்தி பயணச்சீட்டுகள் பெற்று ஒருவழிப்பாதைப் பயணத்தை மேற்கொள்ளலாம். புயல் எச்சரிக்கை காரணமாக நாளை மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் மேலும் ஒரு நாள் சலுகை அளித்துள்ளனர். மேலும் வரும் டிச.17ம் தேதியன்றும் ரூ. 5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம். மேலும் இது இ-க்யூஆா் குறியீடு மூலம் பெறப்படும் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை, கைப்பேசி செயலி, ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் உள்ளிட்ட முறைகளில் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது என மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.