லஞ்சப் பணத்துடன் சிக்கிய ED அதிகாரி – அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

Scroll Down To Discover
Spread the love

திண்டுக்கல்லில், வழக்கை முடித்து தருவதாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை பெயரில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு உரிய நபர் ஒருவர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.20 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்தது.அதில், பணத்தை கொண்டு வந்தது அமலாக்கத்துறையைச் சேர்ந்த அங்கித் திவாரி என்பதும், திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர் ஒருவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதும், அந்த வழக்கை முடித்து வைக்க டாக்டரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சத்தை பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அலுவலகத்தில் சோதனை : இந்த விவகாரம் தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், அங்கித் திவாரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.