ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 3965 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

ஆயுதபூஜை இந்த ஆண்டு வரும் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை ஆகும். ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை இருப்போருக்கு 3 நாட்கள் சேர்த்து விடுமுறை கிடைத்துவிட்டது. அது போல் விஜயதசமி தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை ஆகும். எனவே அவர்களை பொருத்தமட்டில் 4 நாட்கள் விடுமுறை தினமாகியுள்ளது.

பொதுவாக இது போன்ற தொடர் விடுமுறைகளின் போது மக்கள் சென்னை, பெங்களூரிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர். அந்த வகையில் இந்த ஆயுத பூஜைக்கும் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வர் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூடுதலாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகிற 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.