ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த பணம் – பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்

Scroll Down To Discover
Spread the love

மகாதேவ் ஆன்லைன் சூதாட்டம் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அக்., 6க்குள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

வட மாநிலங்களில் மகாதேவ் ஆப் என்ற ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பேர் பணத்தை இழந்துள்ளனர். இதில் பல நூறு கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்து, அதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய விசாரணைக்காக அவர் அக்., 6க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட மோசடியில் மேலும் சில பாலிவுட் பிரபலங்கள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.