பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் – 50 பேர் பலி..!

Scroll Down To Discover
Spread the love

பாகிஸ்தானில் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பாலுசிஸ்தானின் மஸ்தங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியில், மிலாது நபியை முன்னிட்டு ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது.இந்த சம்பவத்தில், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்தனர்.

50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.