கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி… உறவை சீர்குலைக்க முயற்சி – பின்னணியில் பாகிஸ்தான் செய்த சதி அம்பலம்

Scroll Down To Discover
Spread the love

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார்.

ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கவில்லை. நிஜ்ஜார் கொலையால் இந்தியா-கனடா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் கனடாவின் போக்கு உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபை கூட்டத்தில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடும் வகையில் கனடா தூதர் பேசி உள்ளார்.

அதே நேரம் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐ.நா. அவையில் உரையாற்றி இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலி ஜெஸ்ன்ஸ் (ஐ.எஸ்.ஐ.) கனடாவில் ஹர்தீப்சிங் நிஜ்ஜாரை கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கான ஆதாரங்களும் வெளியாகி உள்ளன. நிஜ்ஜாரை கொல்ல ஐ.எஸ்.ஐ. சில கிரிமினல்களை வேலைக்கு அமர்த்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து, நிஜ்ஜார் கொலை மூலம் இந்தியா-கனடா இடையிலேயான உறவை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.