தேசிய நல்லாசிரியர் விருது – தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நாளில் நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்குகிறார். விருது பெற உள்ள ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு வெள்ளி பதக்கமும், 50 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளது.