இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து – சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலக மல்யுத்த கூட்டமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் பிரிஜ் பூஷண் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தலைவர் உள்ளிட்ட 15 பதவிகள் அடங்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு 45 நாள்களுக்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதால் உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பியும், பாஜக எம்.பி.யும், முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் பிரிஜ் பூஷன் மீது 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவர் உட்பட 7 வீராங்கனைகள் பாலியில் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்பினர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனடியாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் மழுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் வீரர்களின் ஆதரவளித்தன.

இதனையடுத்து, பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் குற்றச்சாட்டில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியதாலும், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டதாலும், உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் பிரிஜ் பூஷண் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைதொடர்ந்து, தலைவர் உள்ளிட்ட 15 பதவிகள் அடங்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடைபெற இருந்தது. கடந்த மே 30ஆம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு அடுத்த 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று உலக மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதி இருந்தது

ஆனால் வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்தும் தேர்தல் நடத்தப்படாதை தொடர்ந்து இந்தியாவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.