உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லை – – 80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே 80 கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும் மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது