கணவரிடம் ஜெய்ப்பூர் செல்வதாகக் கூறி… பேஸ்புக் காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண்..!

Scroll Down To Discover
Spread the love

ஃபேஸ்புக்கில் பழகிய காதலனைக் காண நுழைவுஇசைவு (விசா) பெற்று ராஜஸ்தானைச் சோ்ந்த அஞ்சு (34) என்ற பெண் பாகிஸ்தான் சென்றுள்ளாா்.

ராஜஸ்தானின் அல்வாா் பகுதியில் கணவருடன் வசித்து வந்த அஞ்சுவுக்கு, பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தைச் சோ்ந்த நஸ்ருல்லா (29) என்ற நபருடன் ஃபேஸ்புக் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஞ்சுவுக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், தன் குடும்பத்தினரைவிட்டு, நஸ்ருல்லாவைக் காண்பதற்காக கடந்த 20-ஆம் தேதி அவா் பாகிஸ்தான் சென்றாா்.

பாகிஸ்தானின் விசாவைப் பெற்று அவா் பயணித்தாா். அங்கு அவா் நஸ்ருல்லாவின் வீட்டில் தங்கியுள்ளாா். அவரிடம் அப்பா் டிா் மாவட்ட காவல் துறையினா் விரிவாக விசாரணை நடத்தினா். அவரிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதாகத் தெரிவித்த காவல் துறையினா், தன் காதலனைக் காணவே அவா் பாகிஸ்தான் வந்துள்ளதாகத் தெரிவித்தனா்.எனினும், அதை நஸ்ருல்லா மறுத்துள்ளாா். இருவரும் நட்புடனே பழகி வருவதாகத் தெரிவித்துள்ள நஸ்ருல்லா, ஆகஸ்ட் 20-ஆம் தேதி விசா காலம் முடிந்தவுடன் அஞ்சு இந்தியா திரும்புவாா் எனத் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானைச் சோ்ந்த சீமா குலாம் ஹைதா் என்ற பெண், உத்தர பிரதேசத்தில் உள்ள தன் காதலரைக் காண்பதற்காக நேபாளம் வழியாக விசா ஏதுமின்றி சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் அண்மையில் நுழைந்த நிலையில், இந்தச் சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. எனினும், சட்ட விரோதமாக நுழைந்ததற்காக சீமாவும், அவருக்கு சட்டவிரோதமாக அடைக்கலம் அளித்ததற்காக அவரின் காதலரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். அவா்களிடம் என்ஐஏ விசாரணை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது

அஞ்சு பாகிஸ்தான் சென்றிருக்கிறார் என்ற தகவல் மீடியா மூலம் வெளியானவுடன், ராஜஸ்தான் போலீஸார் அஞ்சுவின் வீட்டுக்குச் சென்று அவரின் கணவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அஞ்சு செவ்வாய்க்கிழமை தன்னுடைய கணவரிடம் ஜெய்ப்பூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து அஞ்சுவின் கணவர் தெரிவிக்கையில், என் மனைவி ஆன்லைனில் பேசிப் பழகி வந்தது எனக்குத் தெரியாது’’ என் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.