ஆபரேஷன் திரிநேத்ரா-2 – ஜம்முவில் 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

Scroll Down To Discover
Spread the love

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் ஜம்மு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ஆபரேஷன் திரிநேத்ரா-2 மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக பூஞ்ச் மாவட்டத்தில் சிந்தாராவின் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அங்கு விரைந்த பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஜம்மு போலீசார் தீவிர ரோந்து மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில்,‘‘வெளிநாட்டை சேர்ந்த 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதன் மூலமாக பெரிய தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது” என்றார். இதனிடையே பத்காம் மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.