குட்கா வழக்கு தாமதம் -ஆளுநர் ஆர்.என்.ரவியால் 11வது முறையாக வாய்தா கோரிய சிபிஐ..!

Scroll Down To Discover
Spread the love

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற பொருட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, கிடங்கு உரிமையாளர், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரின் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், இன்று விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பு, மத்திய அரசிடம் அனுமதி கோரிய நிலையில், அனுமதிக்கடிதம் இன்னும் கிடைக்கததால் இன்று நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேலும் அவகாசம் கேட்டதால் வழக்கை ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கா், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி தராததால், 11வது முறையாக நீதிமன்றத்தில் வாய்தா கேட்டுள்ளது சிபிஐ என்பது குறிப்பிடத்தக்கது.