பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது…!

Scroll Down To Discover
Spread the love

மத்தியபிரதேச மாநிலத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக இளைஞர் அணி நிர்வாகி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பா.ஜ எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், பா.ஜ பிரமுகருமான பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்த நிலையில் பர்வேஷ் தலைமறைவானார்.

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார்.
https://twitter.com/ManiSek32574261/status/1676196567244734464?s=20
இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடத்தி பரவேஷ் சுக்லாவை கைது செய்த காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.