சொத்துக்குவிப்பு வழக்கு – அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

Scroll Down To Discover
Spread the love

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் வந்தது.

அப்போது, இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டுள்ளார்.