நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது -தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதுதொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு இன்று மேற்கொண்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி இதற்கான அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றது. கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டன.

இதன்படி நாளை (22-ந்தேதி) முதல் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் 500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.