புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் – டிரோன் பறக்கவிட தடை..!

Scroll Down To Discover
Spread the love

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஜெகநாதர் கோவில் அருகே டிரோன்களை பறக்க விடுவதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர்.

ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில் இருக்கும். கோவில், தேர்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இதுபோல், தடையை மீறி டிரோன் பறக்க விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். டிரோன்கள் மூலம் ஏற்படும் பொருட்சேதம் மற்றும் காயத்துக்கு அதை இயக்கியவர்களே பொறுப்பு என்றும் கூறினார். தேரோட்டத்தின்போது, போக்குவரத்தையும், மக்கள் கூட்டத்தையும் கண்காணிக்க பூரி மாவட்ட போலீசார் மட்டும் டிரோன்களை பயன்படுத்துவார்கள் என்று போலீசார் தொிவித்தனர்.