வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது -ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுக விமர்சனம்

Scroll Down To Discover
Spread the love

வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீடுகள் வராது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாடு பயணத்தை ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்துள்ளார்.

உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணா மாநிலம் ஈர்த்து வருவருகிறது. வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது.

முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். முதலில் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.