சிங்கப்பூர் வர்த்தகத் துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார். இன்று காலை சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனுடன், முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார்.

இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் அதில் பேசப்பட்டது. மேலும் செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக் உதரி பாகங்கள் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆலோசனை நடத்தினர்.

புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார். சிங்கப்பூரில் நடக்க இருக்கும் பிண்டெக் மாநாட்டில் தமிழநாடு அரசின் குழு பங்கேற்க ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.