ஜி-20 உச்சி மாநாடு – பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட அமெரிக்க அதிபர்..!

Scroll Down To Discover
Spread the love

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிற்கு இடையே, குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நரேந்திர மோடி, ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, சிட்னியில் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நகழ்ச்சியில் பங்கேற்க டிக்கெட் கேட்டு ஏராளமான அழைப்புகள் எனக்கு வருகிறது. 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த மைதானத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஆனாலும் இன்னும் டிக்கெட் கேட்டு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது எனக்கூறிய அல்பானீஸ், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 90 ஆயிரம் பேர் அமரக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் நினைவு கூர்ந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் கூறுகையில், நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். வாஷிங்டன்னில் அடுத்த மாதம் உங்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகின்றனர். நான் நகைச்சுவை செய்கிறேன் என நினைத்தால், என்னுடைய குழுவினரை கேட்டுப் பாருங்கள். நீங்கள் மிகவும் பிரபலமாகி விட்டீர்கள். குவாட்டில் நாம் ஆற்றும் பணி உள்ளிட்ட அனைத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தில் இந்திய கலாசாரத்தை பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறார். ஜப்பானில், மஹாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த மோடி, பப்புவா நியூ கினியாவில், அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வெளியிட உள்ளார்.

இதனிடையே, ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டில் இன்றைய(மே 21) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , மறுசுழற்சி பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார். அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது