கேரளாவில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.!

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம் கொச்சி நடுகடலில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, என்.சி.பி., எனப்படும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், இந்திய கடலோர காவல்படையினர் இணைந்து ரெய்டு நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் படகு ஒன்றை மறிந்து சேதனையிட்டனர்.

அதில் 2,500 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதை பொருள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 12 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.