தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம் : டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு – நாசர் அதிரடி நீக்கம் –

Scroll Down To Discover
Spread the love

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தற்போது அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. பால் வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் மன்னார்குடி எம்எல்ஏவும், டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக ஆவின் நிறுவனத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதற்கு அமைச்சரின் செயல்பாடு சரியில்லை என்று பால் முகவர்கள் நேரடியாகவே குற்றம்சாட்டு கூறி வந்தனர். இதனை தொடர்ந்து சா.மு.நாசர் அமைச்சர் பதவி இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள டிஆர்பி ராஜா நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது தொடர்பான முதல்வரின் பரிந்துரையை ஏற்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.