சமையல் எண்ணெய் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

Scroll Down To Discover
Spread the love

சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதால் அவற்றின் விலையை குறைக்கும்படி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்ககளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச அளிவில் சமையல் எண்ணெய் தயாரிப்பிற்கான மூல பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை குறைந்துள்ளன. இதையடுத்து சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா ரூ.1.57 லட்சம் கோடி மதிப்புள்ள சமையல் எண்ணெயை இறக்குமதி செய்தது. மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து பாமாயில்,பிரேசில், அர்ஜென்டினாவில் இருந்து சோயா எண்ணெயும் இறக்குமதி ஆகிறது.

சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா,‘‘ சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதால் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும்’’ என கூறினார். தாரா பிராண்ட் சமையல் எண்ணெய் தயாரித்து வினியோகிக்கும் மதர் டைரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.