பாஜக அலுவலகம் மீது தாக்குதல் : அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி – காங்கிரஸை கடுமையாக சாடிய அண்ணாமலை..!

Scroll Down To Discover
Spread the love

அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இதுபோன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், பாஜக தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்ததை தொடர்ந்து அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது.இந்நிலையில் இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இன்று நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரசார் 20-க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து பாஜகவினர் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை அவர்கள் கொண்டுவந்த காங்கிரஸ் கொடிகளை கொண்டு அடித்து விரட்டினர்.

காங்கிரஸ் கொடிகளை பாஜகவினர் எரித்தனர். அதை தடுக்க வந்த போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தாக்குதலில் காயம்பட்ட இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளர் லாரன்ஸ் மற்றும் பாஜக சக்திகேந்திரா கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் ஆகிய இருவர் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தனது இருப்பைக் காட்ட இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.


தமிழக காவல் துறை உடனடியாக பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இதுபோன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், பாஜக தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.