ஜல்ஜீவன் இயக்கம் – 60 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு..!

Scroll Down To Discover
Spread the love

ஜல்ஜீவன் இயக்கம் மூலம் சுமார் 60 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2019 நிலவரப்படி நாட்டில் 3.23 கோடி ஊரக வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29.03.2023-ன்படி மேலும் 8.36 கோடி ஊரக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 19.43 கோடி ஊரகப்பகுதியில் உள்ள வீடுகளில் 11.59 கோடி (59%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.