வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் – உரிய விசாரணைக்கு ரயில்வே உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் அண்மையில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைறெ்று வருகிறது.

இந்த நிலையில், மேற்குவங்காள மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம் பராக்கா பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் ரெயில் மீது திடீரென்று கற்களை சரமாரியாக வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் ரயில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளது. கல்வீச்சு தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து கிழக்கு ரயில்வே சிபிஆர்ஓ கவுசிக் மித்ரா கூறுகையில், ரயில் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் துரதிருஷ்டவசமானது. வந்தே பாரத் ரயிலை குறி வைத்து தாக்கும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்றார்.